தமிழ்நாடு

ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

Admin July 31, 2025 0
ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!
ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

எழுதியது யாருனு தெரியலை... படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 

#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

Father-and-Son-Story Emotional-Real-Incident Family-Love Unconditional-Support Fatherhood-Tribute Misunderstood-Emotions Tamil-Emotional-Stories Parent-Sacrifice Life-Lessons True-Story-from-Chennai
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!

*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்*   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!

கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு

View more
மகளிர் அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
மகளிர் அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

🌸 உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! 🌸 மகளிர் என்பது சக்தியின் வடிவம், சிந்தனையின் வெளிப்பாடு, சமுதாய வளர்ச்சியின் ஆதாரம்! இந்த மகளிர் தினத்தில், தன்னம்பிக்கையுடன் முன்னேறும் அனைத்து பெண்களையும் வணங்குகிறோம். உங்கள் அர்ப்பணிப்பு, உயிர் பாசம், விடாமுயற்சி நம்மை என்றும் வழிநடத்தும் ஒளியாக இருக்கிறது. "ஒரு பெண்ணை உருவாக்குவது, ஒரு சமுதாயத்தை உயர்த்துவதாகும்!" மகளிர் தினம் உங்கள் வாழ்க்கையில் பெருமிதமும், பெருவாழ்வும் தரட்டும். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 08, 2025 0
திமுக வன்முறையில் காயமடைந்த அனிருதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள்!

திமுக வன்முறையில் காயமடைந்த அனிருதனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள்!

ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

பெருங்களத்தூர் MKB நகரில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு உறுதியான புதிய புள்ளிகள்!

பெருங்களத்தூர் MKB நகரில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு உறுதியான புதிய புள்ளிகள்!

தெலுங்கு பேசும் அனைத்து மக்களுக்கும் என் யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு பேசும் அனைத்து மக்களுக்கும் என் யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலுங்கு பேசும் அனைத்து சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கும் என் இதயப்பூர்வமான யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யுகாதி உங்கள் வாழ்வில் 🔹 அமைதியை 🔹 ஆரோக்கியத்தை 🔹 வளத்தையும் 🔹 இனிமையான தொடக்கத்தையும் பொதிந்து தரட்டும்! புதிய ஆசைகளுடன், புதிய இலக்குகளுடன், இனிதே துவங்கட்டும் உங்கள் வருடம்! இனிய யுகாதி நல்வாழ்த்துகள்! 🙏🌿 #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 30, 2025 0
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புரட்சியாளர், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறோம்.

புரட்சியாளர், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறோம்.

Top week

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!
குற்றம்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!

Admin July 28, 2025 0